• உள்ளாட்சி தேர்தல் வெற்றி - வாழ்த்து

  “தமிழகத்தின் அடுத்த முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் தான்

  என்பது உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது”

   - பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அறிக்கை -
  நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி மன்றத்தேர்தலில் 
  திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி
  அமோக வெற்றியினை பெற்றிருக்கிறது.

  சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட ஊராட்சி மனறத் தலைவர் பதவியிலிருந்து - 
  ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் என அனைத்திலும்
  திமுக மற்றும் அதன் தோழமை கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கனியினை 
  அள்ளி குவித்திருக்கிறார்கள். 

  இந்த வெற்றி நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் 
  தேர்தலில் மட்டுமல்லாது, இனி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடரும்.
  மேலும், அடுத்து நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில், திமுக தலைமையிலான 
  கூட்டணியே மாபெரும் வெற்றி பெற்று, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக 
  பொறுப்பேற்பார் என்பதற்கான அடையாளமே இந்த வெற்றியாகும். அதனை ஈட்டித் தந்த
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் 
  என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.