• தமிழக முன்னாள் சபாயநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P., இரங்கல்

    தமிழக சட்டப்பேரவைத் தலைவராக 1985 முதல் 1989 வரை பொறுப்பு வகித்த திரு.பி.எச். பாண்டியன்  அவர்கள், சட்டப்பேரவை நடைமுறைகளின் வரையறைகள் குறித்தும், அதிகாரங்கள் குறித்தும்  மக்கள் அறிந்து கொள்கின்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றியவர். மிகச்சிறந்த வழக்கறிஞராகவும் – சேரன்மாதேவி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தொடர்ந்து நான்குமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, அத்தொகுதி மக்களின்பால் அளப்பறிய அன்பு கொண்டவராகவும் விளங்கிய திரு.பி.எச்.பாண்டியன் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.