• “நாளை மலரும் புத்தாண்டினை இளைஞர்கள் கைகளில் ஒப்படைப்போம்” - டாக்டர் பாரிவேந்தர் M.P., ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

    ‘ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்’ என்கிற சம்பிரதாயமான   வார்த்தைகளில் பிறப்பதல்ல புத்தாண்டு.  கடந்த ஆண்டில் ஏற்பட்ட அனுபவங்களின் நீட்சியாக, அடுத்த ஆண்டை கொண்டுசெல்லவேண்டும் என்பதே  நடைமுறை உண்மையாகும்.‘2020-ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும்’  என  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்  அவர்களின்  கூற்றையும்  - கனவையும்  நனவாக்குகின்ற  வல்லமையும் - ஆற்றலும் கொண்டவர்கள் இளைஞர்கள்.  உலகின் வேறு எந்த  நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இளைஞர்கள் சக்தி  மேலோங்கியிருக்கிறது.  அந்த இளைஞர்களின் கைகளில்  நாளை பிறக்கவுள்ள 2020 - ஆம் ஆண்டினைக் கொடுப்போம். அவர்களின் நேரிய  சிந்தனையில் இந்தியா பல  உச்சங்களைத் தொடும் என்கிற நம்பிக்கையோடு,   ஆங்கில  புத்தாண்டு நல்வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கின்றேன்.