• மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 17 பேர் குடும்பத்தினருக்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P., இரங்கல்

  கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையினால் நடூர் ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காம்பவுண்டு சுவர் இடிந்து, அதன் அருகில் இருந்த நான்கு ஓட்டு வீடுகள் மீது விழுந்துள்ளது. இதில் நான்கு வீடுகளில் இருந்தவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி, உயிரிழந்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து, இதுவரை 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். இத்துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

  பாதுகாப்பற்ற - பலவீனமான முறையில் சுற்றுச்சுவர்  அமைத்த இந்த இடத்தின் உரிமையாளர் மீது உரிய வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்த வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான நிரந்தர வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு உதவி செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

  இத்துயர நிகழ்வில் பலியான 17 பேரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். 

  அன்புடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P.,

  பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி.