• உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம்வென்ற இளவேனிலுக்கு பெரம்பலூர்நாடாளுமன்ற உறுப்பினர்- டாக்டர் பாரிவேந்தர் M.P வாழ்த்து

    உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதி்ச் சுற்று போட்டிகள் சீனாவின் புதியான் நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று (21/11/19) நடைபெற்ற மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் அவர்கள் தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் சிறப்பு சேர்த்துள்ளார். அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை வீராங்கனை இளவேனில் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வெற்றியின் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று, மேலும் பல்வேறு வெற்றிகளை குவிக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

    இதே போல், பத்து மீட்டர் ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மேலும் ஒரு தங்கப்பதக்கத்தினை பெற்று, நமது நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ள இந்திய வீராங்கனை மனுபாக்கர் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.