• தேசியபத்திரிக்கை தினம்- டாக்டர் பாரிவேந்தர் M.P. வாழ்த்து

    பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில்ஒவ்வொரு ஆண்டும் தேசிய பத்திரிக்கை தினம் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. 

    இந்நாளில்தமிழகத்தில் பத்திரிக்கையாளர்  பாதுகாப்புச் சட்டத்தினை கொண்டுவரவேண்டும் எனவும்பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கவேண்டும் எனவும்  தமிழக அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றேன்.

    அரசின் அனைத்து செயல்பாடுகளையும் மக்கள் மன்றத்தில் விருப்பு வெறுப்பின்றி கொண்டுபோய் சேர்க்கின்ற கடமையினை தேசிய மற்றும் மாநில மொழிகளில் வெளிவரும் செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள்தான் செய்து வருகின்றனர். 

    இத்தகு சிறப்பு வாய்ந்த பணியினை செவ்வனே செய்துவரும் பத்திரிக்கைத் துறையைச் சார்ந்த அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கின்றேன்.