• வரும் 15 - ம் தேதி - சென்னை IJK தலைமையகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் - IJK தலைவர் ரவி பச்சமுத்து அறிவிப்பு

    மிக விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து  ஆலோசிக்கவும்வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறியவும்தோழமைக் கட்சியினருடன் இணைந்து எவ்வாறு தேர்தல் பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கவும்மாவட்ட  நிர்வாகிகளுக்கான ஆலேசனைக் கூட்டம் வரும் 15.11.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் கலந்துகொள்ளஅனைத்து மாவட்டத் தலைவர்கள் – செயலாளர்கள் – பொருளாளர்கள்மாவட்ட இளைஞரணிச் செயலாளர்கள் மாவட்ட மகளிரணிச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே,  மேற்குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.