• தேர்தல்ஆணையத்தின் அதிகாரங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவர் திரு.டி.என்.சேஷன் அவர்கள்- IJK தலைவர் ரவி பச்சமுத்துஇரங்கல் செய்தி

    ந்திய ஆட்சிப்பணியில் தேர்வுபெற்ற திரு.டி.என்.சேஷன் அவர்கள்மாவட்ட ஆட்சித்தலைவராகவும்மாநில – மத்திய அரசு துறைகளின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்பின்னர்ஆளுமைமிக்க இந்திய தேர்தல் ஆணையாளராக   1990-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்அதுவரை இந்திய தேர்தல் ஆணையம் என்பதுமத்திய – மாநில அரசுகளின் அறிவுரைப்படி தேர்தல்களை நடத்தும் சம்பிரதாயமான ஒரு அமைப்பாக மட்டுமே இருந்துள்ளதுதிரு.டி.என்.சேஷன் அவர்கள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர்தான் அதன் முழு அதிகாரமும் பயன்படுத்தப்பட்டது.

    தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கான காலவரையறைவிளம்பரங்களில் கட்டுப்பாடு போன்றவற்றை கடுமையாக செயல்படுத்தினார்இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் என்கிற பெருமை திரு.டி.என்.சேஷன் அவர்களையே சேரும் எனக் கூறலாம்இத்தகு சிறப்பு வாய்ந்த திரு.டி.என்.சேஷன் அவர்களின் மறைவிற்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடுஅன்னாரின் குடும்பத்தினருக்கும் என் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்