• மனித நேயமிக்க இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்- IJK தலைவர் ரவிபச்சமுத்து மிலாது நபி வாழ்த்து

    இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினம் மிலாது நபி திருநாளாக  உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.  தான் வாழ்ந்த காலத்தில்,  அனைத்து நற்குணங்களின் முழு வடிவமாக திகழ்ந்தவர் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள்.  மனிதநேயத்தையும்  –  வாழும் பண்பாட்டையும் உலகிற்கு போதித்ததோடு தானே அப்போதனைகளை முதலில் கடைபிடித்தவர். 

     அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்நாளில் உலகில் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை நிலவிட வளர்ந்து வரும் நம் இந்தியத் திருநாட்டில்தீவிரவாதம் – மதவாதம் – சாதியவாதம் போன்றவை ஒழிந்து அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற,  மனிதநேயமிக்க இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் எனக்கூறி,  உலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது உளம்கனிந்த மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.