• ஆழ்துளைக் கிணற்றால் ஏற்பட்ட இந்த மரணமே இறுதியாய் இருக்கட்டும் -குழந்தை சுஜித் மரணத்திற்கு டாக்டர் பாரிவேந்தர் M.P. இரங்கல்

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமம் இன்று  தமிழக  எல்லைகளையும் கடந்து மக்கள்  உற்றுநோக்கும் ஊராக மாறியுள்ளது. காரணம் அவ்வூரில் பிறந்து – இன்று நம் நெஞ்சை ரணமாக்கி, புதைகுழியில் மாண்டுவிட்ட இளஞ்சிறுவன் சுஜித்தின் மரணம். தன் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆழக்குழியில் விழுந்து தன் உயிரை விதையாக்கியுள்ள குழந்தை சுஜித்தின் மரணம் நம் நெஞ்சையெல்லாம் நெகிழச் செய்துள்ளது. கடந்த 80  மணி நேரமும் தமிழக மக்களின் கண்கள் அந்த பிஞ்சு முகத்தைக் காணவே காத்திருந்தன. எனினும் இறுதியில் மிஞ்சியது சடலமாய் - அந்த பிள்ளையின் உடலும், உயிருமே.

    இதுபோன்ற ஆழ்துளைக்கிணறு மரணங்கள் இதுவரை எத்தனையோ ஏற்பட்டிருந்தாலும் கூட, இந்த மரணமே இறுதியாய் இருக்கட்டும் என வேண்டுகிறோம். அரசின் உதவிகளும் - முயற்சிகளும் ஆபத்திற்கு பின்புதான் வரமுடியும் என்பதால், தங்களை தற்காத்து கொள்வது ஒவ்வொரு தனிமனிதரின் கடமையும், பொறுப்புமாகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளக் கூடிய தருணம் இது. 

    இந்த ஒரு சோக நிகழ்வே ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் படிப்பினையாக இருக்க வேண்டும் எனக்கூறி, மகன் சுஜித் வில்சனை இழந்து வாடும் தாய் கலாமேரிக்கும்,   தந்தை பிரிட்டோவிற்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.