• தீமைகள் அகன்று நன்மைகள் பெருகட்டும் - IJK தலைவர் ரவிபச்சமுத்து தீபாவளி வாழ்த்து –

    இந்தியாவில் அனைத்து மக்களும் ஒருசேர இணைந்து ஒரே நாளில் மகிழ்வுடன் கொண்டாடும் பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்றாகும். தீமைகள் அகன்று – நன்மைகள் பெருகுவதன்  அறிகுறியாக  விளக்கேற்றி வைக்கும்  ஒளித்திருநாளான  இத்தீபாவளி பண்டிகையில், பட்டாசு ஒலியிலும் – மத்தாப்பின்  ஒளியிலும் மக்களின் வாழ்வு மலர்ந்து – மகிழ்ச்சி  வெள்ளம் பெருக வேண்டும்.

    மேலும், இத்தீபாவளி திருநாளில் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளவாறு, சுற்றுச்சூழலையும், வளிமண்டலத்தையும் பாதிக்காத வகையில், நேரக்கட்டுப்பாட்டுடன் பட்டாசுகளை வெடித்து தீபாவளித் திருநாளை கொண்டாட வேண்டும் எனக்கூறி, அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.