• விக்ரவாண்டி - நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஐஜேகே ஆதரவு - ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து அறிவிப்பு

    அடுத்த மாதம் 21-ஆம் தேதி விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்குப்பின் கடந்த ஆகஸ்ட் மாதம் 05-ம் தேதி நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி'யில் இந்திய ஜனநாயகக் கட்சியும் இடம் பெற்றது. 

    இத்தேர்தல்களில், திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஐஜேகே-வினர் தேர்தல் பணிகளில் முழு அளவில் ஈடுபட்டனர். தற்போது, விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலிலும் திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பணியாற்றுவது என இந்திய ஜனநாயக கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரையும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களையும் இந்திய ஜனநாயக கட்சி ஆதரித்து தேர்தல் பணியாற்றும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.