கேரள மாநிலத்தின் அறுவடை திருநாளை, மலையாள மொழிபேசும் மக்கள் ஓணம் பண்டிகையாக மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
மகாபலி மன்னன் ஆண்டிற்கு ஒருமுறை தம் நாட்டை காண வருவார் என்றும், அப்போது தங்களுடைய இல்லத்திற்கும் வருவார் எனக்கருதி, மிகுந்த நம்பிக்கையுடன் அவரை வரவேற்க தங்கள் இல்லத்தினை அழகுபடுத்தி – வாசலில் அத்தப்பூ கோலம் போட்டு வரவேற்று மகிழும் நாளிது.
இத்திருவோணத் திருநாளில் மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies