• திரு ராம் ஜெத்மலானி அவர்களின் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி இரங்கல்

    முன்னாள் மத்திய அமைச்சரும், மிகச்சிறந்த மூத்த வழக்கறிஞருமான திரு. ராம் ஜெத்மலானி அவர்களின் மறைவு சட்ட - நீதித்துறைக்கு பேரிழப்பாகும்.

    புகழ்பெற்ற பல வழக்குகளில் அவர் வைத்த வாதம் சட்ட நுணுக்கங்களை அலசி ஆராய்வதாக இருந்தது. தனிப்பட்ட வழக்குகள் மட்டுமன்றி, பொதுநல வழக்குகளிலும் அவரின் பங்களிப்பு வியப்புக்குறியதாக இருந்தது. இந்தியாவின் குறிபிடத்தகுந்த சட்ட வல்லுனர்களில் ஒருவராக விளங்கிய திரு.ராம் ஜெத்மலானி அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.