-
பல நூறு ஆண்டுகளாக நம் நாட்டில் கொண்டாடப்படும் மிகச்சில பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று.
'ஞான முதல்வன்' என அழைக்கப்படும் விநாயகப்பெருமானை அவரவர்கள் விருப்பப்படியான வடிவில் சிலை அமைத்து, வீட்டிலும்- வீதிகளிலும் வைத்து வழிபடுகிறார்கள்.
நல்லனவற்றை நினைப்பது - நல்லனவற்றை செய்வது ஆகியவையே இன்றைய உலகில் மிக தேவையான ஒன்றாகும். எதிர்மறை சிந்தனைகள் ஒழிந்து, நேர்மறை எண்ணங்கள் வளர விநாயகரை வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறுவார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் எதிர்கால இந்தியாவின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் தங்களின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்வதற்கான பண்டிகையாக இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
அவ்வகையில், நாடுமுழுவதும் இத்திருவிழாவை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உளம் கனிந்த, விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.