• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்த நாளில் (24.08.2019) 102 கணினிகள் அரசுப்பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்

    இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டாக்டர் பாரிவேந்தர்அவர்களின் பிறந்தநாள் விழா, SRM  தமிழ்ப்பேராயம் – பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் சார்பில், நாளை  (24-08-2019 சனிக்கிழமை) காலை 11.00 மணியளவில், சென்னை அருகே காட்டாங்குளத்தூர் SRM பல்கலைக்கழகம் T.P.கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது.  இப்பிறந்தநாள் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

    குறிப்பாக, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  பெரம்பலூர் – முசிறி – மண்ணச்சநல்லூர் ––லால்குடி – துறையூர் குளித்தலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்ஒரு தொகுதிக்கு ஒரு அரசு பள்ளி வீதம்,ஆறு அரசுப்பள்ளிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் 17 கணிப்பொறிகள் வீதம் 102 கணிப்பொறிகள்மாணவர்களின் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கப்படும் என டாக்டர் பாரிவேந்தர்.M.P அவர்கள் அறிவித்துள்ளார். 

    தன் சொந்த செலவில் 102 கணினிகளை, தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு வழங்கும் இந்நிகழ்சியில்சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நேரிடையாக வந்து பெற்றுக்கொள்வார்கள் என தெரிவித்துக்கொள்கின்றோம்.