• வலிமையும் - வளமையும் கொண்ட நாடாக இந்தியா திகழ பாடுபடுவோம் - டாக்டர் பாரிவேந்தர் M.P, சுதந்திர தின வாழ்த்து

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின்  சுதந்திரப் போராட்ட வரலாற்றில், நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளை என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய நாள் ஆகஸ்ட்-15. இந்திய சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இத்தருணத்தில், நமது எதிர்கால இளையதலைமுறையின் கல்வி – வேலை வாய்ப்பு   உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, மிகச்சிறந்த வலிமையும் – வளமையும் கொண்ட நாடாக இந்தியா திகழ பாடுபடுவோம் எனக்கூறி, அனைவருக்கும் இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.