• சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் வரும் 15-ஆம் தேதி ஐஜேகே தலைவர் திரு. ரவி பச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா

    இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் “இளையவேந்தர்” திரு.ரவிபச்சமுத்து  அவர்களின்  பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் அவரின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி, கட்சியினரால் மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டிற்கான பிறந்தநாள் நிகழ்ச்சிகள் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியிலுள்ள NPR திருமண மண்டபத்தில், 15-07-2018 திங்கட்கிழமை மாலை4.00 மணிக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் அவர்களின்தலைமையிலும், பொருளாளரும் – மூத்த தலைவருமாகிய திரு.ஜி.ராஜன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.

    இப்பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்  வாழ்த்துரை வழங்க உள்ளார். நிகழ்ச்சியில்  இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொறுப்பாளர்களும், திமுக – காங்கிரஸ் – மதிமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

    “சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய கட்சியின் தலைவர் இளையவேந்தர் திரு. ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம்” என கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் அவர்கள்  கூறியுள்ளார்.