• திரு. ஜி.கே.வாசன் அவர்களின் தாயார் திருமதி கஸ்தூரி அம்மையார் அவர்களின் மறைவுக்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P. இரங்கல்

    மறைந்த பெருமதிப்பிற்குரிய ஜி.கே.மூப்பனார் அவர்களின் மனைவியும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்களின் தாயாருமான திருமதி கஸ்தூரி அம்மையார் அவர்கள், உடல் நலமின்மையால் இன்று (26.06.2019) இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். 

    மறைந்த திரு.ஜி.கே.மூப்பனார் மற்றும் த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் ஆகியோரின் அரசியல் பணிகளுக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருந்தவர் திருமதி. கஸ்தூரி அம்மையார் அவர்கள். அத்தகு சிறப்பு வாய்ந்த அம்மையார் அவர்களின் மறைவால் வருத்தமுற்றிருக்கும் திரு.ஜி.கே.வாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.