• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நாளை (08.06.2019) முசிறி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளார்

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மகத்தான வெற்றியினைப் பெற்றார்.இம்மாபெரும் வெற்றியை வழங்கிய பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி செலுத்தும் விதமாக நாளை (08.06.2019) சனிக்கிழமை நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

    பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நன்றி அறிவிப்பு  சுற்றுப்பயண விவரம் வருமாறு,

    08.06.2019 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு, முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொட்டியம் ஒன்றியத்தைச் சார்ந்த மணமேடு கிராமத்தில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தினை தொடங்கி, அலகரை, முள்ளிப்பாடி காலனி, கொளக்குடி, அப்பணநல்லூர்,கிருஷ்ணாபுரம், காமலாபுரம், தோளூர்பட்டி, ஏலூர்பட்டி, மேய்க்கல்நாய்க்கன்பட்டி, M.களத்தூர்,நாகையநல்லூர், பிடாரமங்கலம், மருதம்பட்டி (முருங்கை), உன்னியூர், பெரிய பள்ளிபாளையம், 
    சின்ன பள்ளிபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், சீலைப்பிள்ளையார் புத்தூர், காட்டுப்புத்தூர் பேரூர்,ஆணைக்கல்பட்டி, காடுவெட்டி, நத்தம், M.புத்தூர், அரசலூர் கைகாட்டி, கார்த்திகைப்பட்டி,பாலசமுத்திரம், தொட்டியம் பேரூர், சீனிவாசநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். 

    இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.காடுவெட்டி தியாகராஜன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு.ரவிபச்சமுத்து உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட – ஒன்றிய – நகர –பேரூர் கிளை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.