• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நாளை (07.06.2019) முசிறி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளார்

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மகத்தான வெற்றியினைப் பெற்றார்.இம்மாபெரும் வெற்றியை வழங்கிய பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி செலுத்தும் விதமாக நாளை (07.06.2019) வெள்ளிக்கிழமை நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

    பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நன்றி அறிவிப்பு  சுற்றுப்பயண விவரம் வருமாறு,07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு, முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா.பேட்டை ஒன்றியத்தைச் சார்ந்த மேட்டுப்பட்டி, அட்டாளப்பட்டி, அழுகாப்பட்டி, முத்தம்பட்டி, தாதம்பட்டி, சிட்டிலரை, சோளம்பட்டி, தும்பலம், சூரம்பட்டி, சேருகுடி, பாப்பாப்பட்டி, பூலாஞ்சேரி, அஞ்சலம், நீலியாம்பட்டி, கோணப்பம்பட்டி, ஜடமங்களம், வாளசிராமணி, ஆண்டிப்பட்டி, ஜம்புமடை, கலிங்கப்பட்டி, ஊரக்கரை, மலையப்பநகர், மகாதேவி, மகாதேவி புதூர், வேலம்பட்டி, முத்துராஜபாளையம், லட்சுமாபுரம், இலுப்பூர், பிள்ளாபாளையம், அமராவதி சாலை, கருப்பம்பட்டி, காருகுடி, சின்ன காருகுடி, மேட்டுப்பாளையம், கரிகாலி, உத்தண்டம்பட்டி, ஊருடையாப்பட்டி, தா.பேட்டை, பெருகனூர், தேவானூர் புதூர், தேவானூர், மாணிக்கபுரம், தாண்டவம்பட்டி, ஆராய்ச்சி, வளையெடுப்பு, கிருஷ்ணாபுரம், மாவிலிப்பட்டி, பைத்தம்பாறைஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.காடுவெட்டி தியாகராஜன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு.ரவிபச்சமுத்து உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட – ஒன்றிய – நகர –பேரூர் கிளை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.