• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நாளை (31.05.2019) லால்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளார்

    சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 
    23-ம் தேதி எண்ணப்பட்டது. பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மகத்தான வெற்றியினைப் பெற்றார். இம்மாபெரும் வெற்றியை வழங்கிய பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி செலுத்தும் விதமாக நாளை (31.5.2019) வெள்ளிக்கிழமை நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

    பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நன்றி அறிவிப்பு  சுற்றுப்பயண விவரம் வருமாறு,

    31.05.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நெடுங்கூர் கிராமத்தில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தினை தொடங்கி, ஊட்டத்தூர், நம்புக்குறிச்சி, நெய்குளம், அகரம், ரெட்டிமாங்குடி, குளக்குடி, குமுழூர், கண்ணாகுடி, வந்தலை, காணக்கிளியநல்லூர், பெருவாப்பூர், சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், சரடமங்கலம், மால்வாய், கல்லகம், கீழ் அரசூர், வடுகர்பேட்டை கோவண்டாகுறிச்சி, ஆலம்பாக்கம், திண்ணக்குளம், விரகாலூர், ஆலம்பாடிஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.காடுவெட்டி தியாகராஜன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சௌந்திரபாண்டியன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு.ரவிபச்சமுத்து உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் கிளை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.