• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நாளை (30.05.2019) லால்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளார்

    சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23-ம் தேதி எண்ணப்பட்டது. பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் 6,83,697 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்தபடியாக வந்த அஇஅதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியினைப் பெற்றார். இம்மாபெரும் வெற்றியை வழங்கிய பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி செலுத்தும் விதமாக நாளை முதல் (30.05.2019) நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கின்றார்.

    அதன்படி, நாளை பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லால்குடி சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயண விவரம் வருமாறு:

    30.05.2019 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாளக்குடி கிராமத்தில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தினை தொடங்கி, புதுக்குடி அப்பாதுரை, எசனகோரை, T.வளவனூர், திருமணமேடு, மயிலரங்கம், இடையாற்று மங்கலம், கூகூர், சாத்தமங்கலம், கொப்பாவளி, ஆதிக்குடி, கெங்கமராஜபுரம், கீழ் அன்பில், அரியூர், T.கல்விக்குடி,  ஆலங்குடி மகாஜனம், மாங்குடி நத்தம், முள்ளால், செம்பரை, திம்மியம், கோமாக்குடி,  சிறுமயங்குடி, காட்டூர், பூவாளூர், பெருவளநல்லூர், பல்லபுரம், தச்சங்குறிச்சி, புதூர் உத்தமனூர், நெய்க்குப்பை, மகிழம்பாடி, R.வளவனூர், மருதூர், மாடக்குடி, கீழ்பெருங்காவூர், திருமங்கலம், அகலங்கநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.காடுவெட்டி தியாகராஜன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சௌந்திரபாண்டியன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு.ரவிபச்சமுத்து உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் கிளை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்