• மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இலக்கியாவிற்கு SRM பல்கலைக்கழகம் சார்பில் ரூபாய் மூன்று லட்சம் பரிசுத்தொகை - ஐஜேகே நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் – கீதா தம்பதியினரின், 7-ம் வகுப்பு படிக்கும் மகள் இலக்கியா அவர்கள்,மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றமைக்கு எனது வாழ்த்துக்களையும் – பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    சாதாரணநடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த இலக்கியா அவர்கள்தனது விடாமுயற்சியின் மூலம் இப்பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான கரேத்தே போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ள செல்வி இயலக்கியாவை பாராட்டுகின்ற வகையில்எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூபாய் மூன்று லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கின்றேன்மேலும் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைக்கவும் அவருக்கான உதவிகள் செய்து தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.