• திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சித்ராபவுர்ணமி திருவிழாவில் உயிரிழந்தவர்களின் - குடும்பத்தினருக்கு டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம், வண்டித்துறை  கருப்புசாமி கோயிலில் நடைபெற்ற சித்ராபவுர்ணமி திருவிழாவில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த லட்சுமிகாந்தன்ராஜவேல், கந்தாயிராமர்,சாந்திபூங்காவனம்வள்ளி ஆகியோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்ற இக்கோயில் திருவிழா முறைப்படி அரசின் அனுமதி பெற்று நடைபெற்றுள்ளதா..? இத்திருவிழாவிற்கு போதிய அளவில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா..? திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏதேனும் கோயில் நிர்வாகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதா..? என்பதனை தமிழக அரசு தெரியபடுத்தவேண்டும்சில தனி நபர்கள் நடத்தும் இதுபோன்ற கோயில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும், பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமயில் விசாரனைக் கமிஷன் அமைத்து அதன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்