• இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு டாக்டர் பாரிவேந்தர் கண்டனம் - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

    இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், மேற்கு பகுதி கடலோர நகரமான நீர்க்கொழும்பிலுள்ள புனித செபாஸ்டியர் தேவாலயம், மட்டக்களப்பு நகரிலுள்ள புனித மைக்கேல் தேவாலயம் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளில் நேற்று (21.04.2019) நடைபெற்ற கொடூரமான குண்டுவெடிப்பில் சுமார் 215-க்கும் அதிமானோர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

    வழிபாட்டிற்காக கூடியிருந்த சமயத்தில் நடத்தப்பட்ட கோழைத்தனமான இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த மனிதகுலத்தாலும் ஏற்கமுடியாத காட்டுமிராண்டிச் செயலாகும்இந்த மனித வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்திய அமைப்புகள் எதுவாக இருந்தாலும், எந்த நாட்டிலிருந்து செயல்படக்கூடியதாக இருந்தாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக அழித்தொழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் என வலியுறுத்துகின்றேன்