• வாக்குச் சாவடிகளில் பா.ம.க-வினர் நிகழ்த்திய வன்முறைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் - ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்

  நேற்று (18.04.2019) டைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், தமிழகம் முழுவதும் அமைதியாக நடைபெற்றது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி திரு.சத்தியபிரதா சாகு அவர்கள்  கூறியுள்ளார்கள்ஆனால் உண்மை நிலை அதற்கு நேர்மாறாகவே உள்ளது.

  பல வாக்குச்சாவடிகளில், பாட்டாளி மக்கள் கட்சியினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து மிரட்டல் விடுத்திருப்பதும்வாக்களிக்க வந்த மாற்றுக்கட்சியினரை அதிகாரத் தொனியில் மிரட்டியிருப்பதும்ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கும் செயலாகும்.

  குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
  திரு தொல்திருமாவளவன் அவர்கள் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியிலும், அதன் பொதுச்செயலாளர் திரு
  ரவிக்குமார் அவர்கள் போட்டியிடும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியிலும் பாமக-வினர் பெருமளவில் வன்முறை  வெறியாட்டத்தினை நிகழ்த்தியிருக்கிறார்கள் 

  அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட  தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுஅப்பாவி பொதுமக்கள் பலரும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தும் காவல் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.

   இதேபோல்அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அடுத்த  கீழ்விசாரத்திலுள்ள  வாக்குச் சாவடியில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, முன்னாள்  மத்திய அமைச்சர் ஆர்.வேலுமுன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இளவழகன் உள்ளிட்ட பா.ம.க நிர்வாகிகள்  வாக்குச்சாவடிகளுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்துணை ராணுவப் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னரே அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

  இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களின் மூலம் பா..க தனது அரசியல் செல்வாக்கினை இழந்துவிட்டது என்பதனையும், தான் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையவிருக்கிறது என்பதனையும் எடுத்துக்காட்டுகிறதுஇந்த வன்முறைகளுக்கெல்லாம்  தூபம் போடும் வகையில், கடந்த  06.04.2019 அன்று காஞ்சிபுரம்  அருகே திருப்போரூரில், “நாம் மட்டும்தான் பூத்திலிருப்போம்சொல்றது புரியுதா..?” என்று அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். இந்த வன்முறைப்பேச்சுக்கள்தான்இச்சம்பவங்களுக்கு  அடித்தளமிட்டிருப்பதாக  கருதுகின்றோம்.

       இது போன்ற ஜனநாயக விரோதப் போக்கினை தேர்தல் ஆணையமும்மாநில காவல் துறையும்  கண்டும்  காணாமல் இருப்பது  வன்மையாக கண்டிக்கப்டத்தக்கதாகும்இதில் சம்பந்தப்பட்ட  பா..-வினர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிய  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என  இந்திய தேர்தல் ஆணைத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்