• சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்திருப்பது வரவேற்கத்தக்கது - IJK நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அறிக்கை

    மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 10 ஆயிரம் கோடி  செலவில் சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டதுஇந்த சாலை அமையஐந்து மாவட்டங்களில்2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும்,  274 கிலோமீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைக்கப்படுவதினால் காப்புக்காடுகள்விவசாய நிலங்கள்குடியிருப்பு பகுதிகள்கடைகள்கல்வி நிறுவனங்கள்,விளைநிலங்களில் உள்ள மரங்கள் அப்புறப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

     

     பசுமை வழிச்சாலை என்கிற பெயரில் ஆயிரக்காணக்கான மரங்களும்சில மலைகளும் வன விலங்குகளும்அழிக்கப்படும் என பல்வேறு சமூக நல அமைப்புகள்,  இயற்கை ஆர்வலர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும்வீண்பிடிவாதத்துடன் இந்த திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டியது

     சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை திட்டமானது அவசர கோலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் எனநாங்கள் அப்பொழுதே கூறியிருந்தோம்.

     இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று (08.04.2019) அளித்துள்ள இத்தீர்ப்பு அப்பகுதிமக்களுக்கு பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதுஇதன் மூலம் தங்களது வாழ்வாதாரமானவிவசாய நிலங்களை இழந்து கலங்கி நின்ற விவசாயிகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதுமேலும்யாரிடம்இருந்தெல்லாம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதோ அவர்களுக்கே மீண்டும் அந்நிலங்களைத் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என வருவாய்த்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதமிழக அரசு இனிமேலும் வீண் பிடிவாதம் பிடிக்காமல்இத்திட்டத்தினை கைவிடவேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகின்றேன்