• திராவிட கலாச்சாரத்தின் அங்கமாக விளங்கும் தெலுங்கு மற்றும் கன்னட இன மக்களுக்கு - டாக்டர் பாரிவேந்தர் ‘யுகாதி’ திருநாள் வாழ்த்து

    தமிழகத்தின் நீண்ட நாள் வரலாற்றில் இரண்டறக் கலந்தவர்களாகவும், மாநிலத்தின் கல்வித்துறையில் சிறப்பான இடம் பெற்றவர்களாகவும் தெலுங்கு மற்றும் கன்னட இன மக்கள் விளங்குகின்றார்கள். மேலும்,முடியாட்சி காலத்தில் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தினையும் தந்திருக்கின்றார்கள். தமிழகத்தின் சில புகழ்பெற்ற திருக்கோயில்கள் தெலுங்கு நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை இந்நேரத்தில் நினைவு கூரவேண்டும்.

    அந்த அளவிற்கு திராவிட கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக விளங்கும் தெலுங்கு மற்றும் கன்னட இன மக்களின் புத்தாண்டு,  நாளை (06.04.2019) ‘யுகாதி திருநாளாக பிறக்கவிருக்கின்றது. இவ்வேளையில்,தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர – சகோதரிகளுக்கு யுகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.