• "கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும்" - டாக்டர் பாரிவேந்தர் அவர்களின், சர்வதேச மகளிர் தின வாழ்த்து

    அரசு பதவிகளிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கான சம உரிமைகள்சம வாய்ப்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதனை நிறைவேற்ற அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகக் கட்சியின் கொள்கையாகும். 

    குறிப்பாககல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவும்அவை பாதுகாக்கப்படவும் அரசியல் சட்டத்திலேயே திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனக்கூறிஐஜேகே மகளிரணியினர் உட்பட, அனைத்து மகளிருக்கும்இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில்  மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.