• எதிர்காலக் கனவுகள் நனவாகும் வகையில் அனைத்து மாணவர்களும் வெற்றிபெற வேண்டும் - பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    கடந்த கல்வி ஆண்டு வரை, பிளஸ் 2 மாணவர்கள் ஒவ்வொரு பாடங்களிலும் 200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதி வந்தனர். அந்த முறை மாற்றப்பட்டு, இக்கல்வி ஆண்டு முதல் 100 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2,941 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

    இன்று (01.03.2019) தொடங்கி, இம்மாதம் 19-ம் தேதி வரை நடைபெற உள்ள இத்தேர்வுகள் தமிழக மாணவர்களின் திறனை, இந்தியா முழுவதும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். நம் மாணவர்கள் மாநிலத் தேர்வுகளில் மட்டுமன்றி, தேசிய அளவிலான தேர்வுகளிலும் வெற்றிகளைக் குவிக்கும் விவேகம் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் நூறு சதவீதம் வெற்றியினைப் பெற்று, அவர்களின் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமையினை சேர்க்க வேண்டும் எனவும், அவர்களின் எதிர்காலக் கனவுகள் நனவாகும் வகையில் மதிப்பெண்களை அள்ளிக்குவிக்க வேண்டும் எனவும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.