• நாளை (27.02.2019) புதன்கிழமை ஐஜேகே மாநில – மாவட்ட பொறுப்பாளர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

    மிக விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பிற கட்சிகளோடு கூட்டணி அமைப்பது குறித்தும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ள இம்மாதம் 5-ஆம் தேதி நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    தங்கள் கூட்டணியில் ஐஜேகே இணைந்துகொள்ள வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுத்து வருகின்றன. நமது கொள்கைகளோடு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பது என்கிற முடிவில் நாம் உறுதியாக உள்ளோம். அதனால்,  எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது,  நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கான வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காண்பது ஆகியவை பற்றி,  மாநில – மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை (27.02.2019) புதன்கிழமை  பிற்பகல் 2.00 மணிக்கு, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், என்னுடைய தலைமையிலும் - கட்சியின் தலைவர் இளையவேந்தர் திரு.ரவி பச்சமுத்து அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. எனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.