• வரும் 5-ம் தேதி திருச்சியில் IJK மாநில பொதுக்குழு கூட்டம் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொள்ள டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு

    இந்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.இந்நிலையில், தேர்தல் களத்தில் நம் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’யில் பங்கேற்று போட்டியிட்டோம். தற்போதைய சூழ்நிலையில் நம்முடைய தேர்தல் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என அறிந்துகொள்ள விரும்புகின்றோம்.

    அதனால், பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டும், வழக்கமாக ஆண்டு தோறும் மாநில பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என்கிற விதியின்படியும், இவ்வாண்டிற்கான பொதுக்குழு வரும்5-ஆம் தேதி (05.02.2019) செவ்வாய்க்கிழமை, நண்பகல் 2.00 மணிக்கு திருச்சி SRM ஹோட்டல் (அனெக்ஸ்) கூட்ட அரங்கில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மாநில – மண்டல – மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் முதன்மை நிர்வாகிகள், கட்சியின் துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அனைவரும் அவசியம் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.