• வாக்களிக்க பணம் பெறுவதையும் – கொடுப்பதையும் தவிர்த்து நமது உரிமையான ஜனநாயகக் கடமையினை ஆற்றுவோம் - டாக்டர் பாரிவேந்தர் குடியரசு தின வாழ்த்து -

    இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கநாள்தான் மக்களாட்சி எனக் கொண்டாடப்படும் குடியரசு தின விழா. சுமார் 200ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் வீழ்ந்துகிடந்த இந்தியத் திருநாட்டை,விடுதலை பெற்ற நாடாக மீட்பதற்கு அண்ணல் காந்தியடிகளின் தலைமையில்மக்கள் ஒன்றிணைந்து போராடிய சத்திய வேகம் - அரசியல் அறநெறிஆகியவற்றினை மீண்டும் புத்துயிர் ஊட்டி நடைமுறைக்குக் கொண்டுவர நல்லதருணமாக இனிவரும் நாட்கள் அமையட்டும்.

    இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் இந்தியவாக்காளர்கள், தங்களுக்கான ஜனநாயகக் கடமையினை எந்தவொரு எதிர்பார்ப்பும்– பிரதிபலனும் இன்றி செய்துமுடிக்க வேண்டும். தாங்கள் அளிக்கும் வாக்கிற்கு,பணம் உள்ளிட்ட அன்பளிப்புகளை பெறுவதும் - கொடுப்பதும் ஜனநாயகத்தைஅவமதிக்கும் செயலாகும். அதனை தவிர்த்து நமது உரிமையான ஜனநாயகக்கடமையாற்ற மக்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும். எனவே இந்தக் குடியரசுதினம், மக்களின் ஜனநாயக மாண்புகளை நிலைநிறுத்தும் திருநாளாகஅமையவேண்டும் எனக்கூறி, இந்திய மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்தகுடியரசு தின நல்வாழ்த்துக்களை தொவித்துக்கொள்கின்றேன்.