• மனித சமூகத்திற்கு நம்பிக்கை எனும் ஒளியேற்றியவர் இயேசுபிரான் - டாக்டர் பாரிவேந்தர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    பிறவியிலேயே ஞானம் மிகுந்தும்தன்னை பின்பற்றிய மக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் மற்றும் துன்பங்களிலிருந்து அவர்களை மீட்டெடுத்தும்தான் வாழ்ந்த காலத்தில் பல்வேறு அதிசயங்களை அரங்கேற்றியவராகவும் விளங்கியவர் கர்த்தர் இயேசு.

    மனித வாழ்வில் நம்பிக்கை என்ற சக்தி வந்துவிட்டால் உலகில் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதனை அனைவரும் உணர ஆன்மீக ஒளியேற்றியவர் அவர்இந்த உலகம் அமைதிபெற வேண்டும் என அவதரித்த இயேசுபிரானின் பிறந்த நாளான இந்த நன்னாளில்உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதர -சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.