• எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மறைவுக்கு - IJK நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர்திரு. பிரபஞ்சன் அவர்கள். புதுச்சேரியில் பிறந்து வளர்ந்து, தஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர். சுயமரியாதை இயக்க கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவர். தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.

    இவர் எழுதிய ‘வானம் வசப்படும்’ எனும் புதினம், 1995-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றது. ‘மானுடம் வெல்லும்’, ‘மகாநதி’, போன்ற நாவல்களை எழுதிய திரு.பிரபஞ்சன், 56 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியச் சேவை செய்து வந்தார்.

    உடல் நலக்குறைவால் இன்று (21-12-2018) இயற்கை எய்திய திரு.பிரபஞ்சன் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரின் வாசக அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.