• நாளை பட்டுக்கோட்டை – பேராவூரணி பகுதிகளில் ஐஜேகே சார்பில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தென்னங்கன்றுகள் வழங்குகிறார்.

    கஜா புயல் பாதித்த பட்டுக்கோட்டை – பேராவூரணி – ஒரத்தநாடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முதற்கட்டமாக 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்  பாரிவேந்தர் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நாளை (07.12.2018) வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல், பட்டுக்கோட்டை – பேராவூரணி ஆகிய பகுதிகளில் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் ஐஜேகே நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் கலந்துகொண்டு, தென்னை விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளையும், புயலால் சாய்ந்துகிடக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் இயந்திரங்களையும் வழங்கவுள்ளார்.

    இந்நிகழ்ச்சிகள் பட்டுக்கோட்டை,  சாந்தங்காடு,  பூவாணம்,  செருபலாக்காடு,  வீரராகவபுரம், நாட்டணிக்கோட்டை,  வீரியங்கோட்டை ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியைச் சார்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியினரும் – விவசாயப் பெருமக்களும் கலந்துகொண்டு பயன்பெருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.