• கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளதற்கு - நடிகர் கமல்ஹாசன் பாராட்டு

  கடந்த 16- ஆம் தேதி  தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம்  உள்ளிட்ட  பல  மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலின் பாதிப்பிலிருந்து அம்மாவட்ட மக்கள் இன்னும் மீண்டெழவில்லை.

  ஆயிரக்கணக்கான தென்னை, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் இந்த புயலில் சிக்கி வேருடன்பிடுங்கி எறியப்பட்டுள்ளது. இதனால் விவசாய குடும்பங்கள் நிற்கதியாக நிற்கும் பரிதாப சூழ்நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.   

  இதையெல்லாம் உணர்ந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்பாரிவேந்தர் அவர்கள், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புயல்பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றார்.

  அதன்படி நேற்று (24-11-18) புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை ஒன்றியம் மாத்தூர், மேலப்பட்டி, சம்பட்டிவிடுதி, கீழப்பட்டி, கணபதிபுரம், ராஜபகதூர், சீப்புகாரன்பட்டி, கருப்புடையன் பட்டி,  கீரனூர் ஆகிய கிராமங்களுக்கும் - கறம்பக்குடி ஒன்றியம், மாங்கோட்டை, குலபெண்பட்டி, சூரக்காடு, கோட்டைக்காடு, கன்னியக்கொல்லை, முக்கூட்டுகொல்லை ஆகிய ஊர்களுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

  அப்பகுதிகளுக்கு சென்ற பொழுது, பாதிக்கப்பட்ட  மக்களின்  இல்லங்களிலும்,  விவசாய நிலங்களிலும்  நேரடியாக  சென்று  அவர்களின் நிலைமையை கேட்டறிந்தார். மேலும், பக்கெட், குவளை, போர்வை, கொசுவத்தி, மெழுகுவர்த்தி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில்,  நாப்கின்கள் ஆகிய பொருட்கள் அடங்கிய சுமார்  60  லட்சம்  ரூபாய்  அளவிற்கான  நிவாரண  பொருட்களையும் வழங்கி வருகின்றார்.

  இதனோடு ஒரு நாளைக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் வீதம் கடந்த  10  நாட்களாக  20 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகின்றார்.

  பாதிக்கப்பட்ட மக்கள் டாக்டர் பாரிவேந்தர் அவர்களிடம் உணர்ச்சி மேலியிட தங்களின் துயரங்களை கொட்டி தீர்க்கின்றனர். “பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் வந்து எங்களை பார்த்துவிட்டு சென்றபோது கூட, எங்களுக்கு நம்பிக்கை வரவில்லை. உங்களை பார்த்தும் தான், எங்களை காப்பற்ற வந்த தெய்வம் போல் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்க தோன்றுகிறது. விவசாய நிலம், வீடு, வாசல், அத்துணையும் இழந்து நிர்கதியா நிற்கிறோம் ஐயா. நீங்கள் தான் எங்களை காப்பற்றவேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.  மேலும்,  பத்து ஆண்டுகள்  பின்னோக்கி  செல்லுகின்ற  அளவிற்கு தங்களின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  எதிர்காலமே  இருண்டு  போய்  விட்டதாகவும்  தெரிவித்தனர். 

   இதனையெல்லாம் கேட்டு கொண்ட டாக்டர்  பாரிவேந்தர்  அவர்கள், 4 மாவட்ட மக்களும் பயன் பெறுகின்ற வகையில்  ஒரு  அறிவிப்பினை வெளியிட்டார். அதில் எஸ் ஆர் எம்  பல்கலைக்கழகத்தில் படிக்கும்  தஞ்சை,  புதுக்கோட்டை,  திருவாரூர், நாகை, ஆகிய மாவட்ட மாணவர்களின் முழு  கல்விக் கட்டணத்தையும்  ரத்து  செய்வதாகவும்,  அவர்கள் எந்த கட்டணமும் இன்றி தங்களின் படிப்பினைதொடரலாம்  எனவும் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் அறிவித்தார். அதன்படி இந்த 4 மாவட்டங்களிலிருந்து  650  மாணவர்கள்  படிப்பதாகவும்,  அவர்களுக்கான  நான்கு  ஆண்டு  கல்விக் கட்டணம் சுமார் 48 கோடி  ரூபாய் எனவும் அறிவித்தார். இந்த 48 கோடி ரூபாய் கல்வி கட்டணத்தை அவர்கள் பலக்கலைகழகத்திற்கு செலுத்தவேண்டியதில்லை. அவர்களுக்கான  இந்த  கல்விக் கட்டணரத்தின்  மூலம்,  அவர்கள்  பெற்றோர்களின் சுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் சிறப்பு வாய்ந்த இந்த அறிவிப்பு,  செய்திதொலைக்காட்சிகள் வாயிலாக ஒளிபரப்பு ஆனது. இதனை அறிந்து கொண்ட  மக்கள்  நீதி  மையம் கட்சியின்  தலைவரும்,  நடிகருமான  கமல்ஹாசன்  அவர்கள்,  டாக்டர்  பாரிவேந்தர்  அவர்களுடன் தொலைபேசியில்  தொடர்புகொண்டு,  கல்விக் கட்டண  ரத்து  அறிவிப்பிற்காக  தனது  பாராட்டினையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொண்டார்.   “இந்த  இக்கட்டான  சூழ்நிலையில்  உங்களின்  இந்த அறிவிப்பு மிகுந்த மனிதநேயமிக்கதாகும்.  அந்த வகையில்  உங்களின்  இந்த  அறிவிப்பு  மிகவும்  சிறப்பு வாய்ந்த  ஒன்றாகும்” எனவும் திரு கமல்ஹாசன் அவர்கள் டாக்டர்  பாரிவேந்தர் அவர்களிடம் தெரிவித்தார்.

   கடந்த 2011-ஆம்  ஆண்டு  கடலூர்,  விழுப்புரம்,  புதுச்சேரி  ஆகிய  பகுதிகளில்  மிகப்  பெரும் பாதிப்பை  ஏற்படுத்திய  “தானே” புயலின்போது  டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் இதேபோன்றதொருஅறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி இந்த 3 மாவட்டங்களைச் சார்ந்த 350 மாணவர்களுக்கானரூபாய் ஏழரை கோடி மதிப்பிலான கல்விக் கட்டணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.