• நாளை (17.11.2018) கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் IJK - வினர் பெருமளவில் கலந்துகொள்ள டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு

  இந்திய ஜனநாயகக் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், நாளை (17.11.2018)காலை 11.00 மணிக்கு, மாவட்டத்தலைவர் சா.முத்துராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

  Ø  நெல் கொள்முதல் விலையை குவிண்டால் 1-க்கு ரூ.2000-மாக உயர்த்தி வழங்கவேண்டும்.

  Ø  திருமண்டங்குடியில் இயங்கிவரும் தனியார் சர்க்கரை ஆலையில் பல வருடங்களாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைத்தொகையும் உடனே வழங்க வேண்டும்

  Ø  கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்ட வேண்டும்

  Ø  பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வேண்டும்.

  Ø கொசுக்களால் பெருகிவரும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் அவதியுருவதை போர்க்கால அடிப்படையில் தடுக்கவும், அதைப்பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

  Ø  கும்பகோணம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், போராட்டக்குழு செயலாளர் எஸ்.சிமியோன் சேவியர்ராஜ், துணை அமைப்புச் செயலாளர் எம்.பி.எஸ்.தஷ்ணாமூர்த்தி உள்ளிட்ட மாநில – மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

  தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் – உறுப்பினர்களும் – பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும் – கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.