• சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தீபாவளித் திருநாளை கொண்டாடுவோம் - டாக்டர் பாரிவேந்தர் தீபாவளி வாழ்த்து

    திருவிழாக்களின் நோக்கம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் – சமுதாயத்தில் சமத்துவமும் -சகோதரத்துவமும் நீடித்து, மக்களிடம் வறுமையும், வன்முறையும் நீங்கி – ஒற்றுமை செழித்து அனைவரின் வாழ்விலும் வளர்ச்சி தழைத்தோங்க வேண்டும் என்பதுதான்.

     அவ்வகையில், தீமைகள் அகன்று – நன்மைகள் பெருகுவதன் அறிகுறியாக விளக்கேற்றி வைக்கும் ஒளித்திருநாளான இத்தீபாவளி பண்டிகையில், பட்டாசு ஒலியிலும் – மத்தாப்பின் ஒளியிலும் மக்களின் வாழ்வு மலர்ந்து – மகிழ்ச்சி வெள்ளம் பெருக வேண்டும்.

    மேலும், இத்தீபாவளி திருநாளில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளவாறு, சுற்றுச்சூழலையும்,வளிமண்டலத்தையும் பாதிக்காத வகையில், நேரக்கட்டுப்பாட்டுடன் பட்டாசுகளை வெடித்து தீபாவளித் திருநாளை கொண்டாட வேண்டும் எனக்கூறி, அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளித் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.