• நாளை (25.10.2018) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் IJK - வினர் பெருமளவில் கலந்துகொள்ள டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு

    இந்திய ஜனநாயக் கட்சியின் அரியலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஜெயங்கொண்டம், காந்தி பூங்கா அருகில்  நாளை (25.10.2018) காலை 11.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் எஸ். செல்வநாதன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் எ. ஜோசப் முன்னிலையிலும் நடைபெறும்.

    நிலக்கரி திட்டத்திற்காக எடுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு  போதிய இழப்பீடு வழங்கவேண்டும் – கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கவேண்டும் – ஜெயங்கொண்டம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் – விருத்தாச்சலம் – கும்பகோணம் - ஜெயங்கொண்டம் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும் – நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2000/- விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கைபரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், போராட்டக்குழு செயலாளர்  எஸ். சிமியோன் சேவியர் ராஜ் உள்ளிட்ட, மாநில – மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

    அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் – உறுப்பினர்களும் – பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும் – கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.