• பஞ்சாபில் தீவிரவாதிகள் சுட்டதில் பலியான தக்கலை ராணுவ வீரர் ஜெகனின் குடும்பத்தினருக்கு - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    கடந்த 8-ம் தேதி  திங்கட்கிழமை பஞ்சாபில் ராணுவ வீரர்களுக்கும் – நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள கோழிப்போர்விளையை அடுத்த பருத்திக்காட்டுவிளையைச் சேர்ந்த ஜெகன் என்கிற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

    திருமணம் முடிந்து சில மாதங்களே ஆனநிலையில் அவரின் மனைவி கர்ப்பமாக உள்ள சூழ்நிலையில் நடந்துள்ள இக்கொடூர மரணம் மிகப்பெரும் அதிர்ச்சியினையும் – சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எந்த ஆறுதல் வார்த்தையும் பயனற்றதாகவே அமையும். எனினும் நாட்டிற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ள ராணுவ வீரர் ஜெகன் அவர்களின் வீரத்தினை எண்ணி, அவர்களின் குடும்பத்தினர் ஆறுதல் அடைய வேண்டுமென கேட்டுக்கொண்டு, அவர்களுக்கு  ஆழ்ந்த இரங்கலையும் – வருத்தத்தினையும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன்.