• வரும் திங்கட்கிழமை (24.9.2018) சேலம் மண்டல ஒன்றிய – நகர நிர்வாகிகள் கூட்டம் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள - டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு -

    இந்திய ஜனநாயகக் கட்சியின் சேலம் மண்டலத்திற்குட்பட்ட ஒன்றிய- நகர பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் திங்கட்கிழமை (24.09.2018) சேலம் அயோத்தியாப்பட்டிணத்திலுள்ள சுவாமி மஹால் திருமண மண்டபத்தில் காலை 11.00மணிக்கு நடைபெற உள்ளதுஇக்கூட்டத்தில்  கலந்துகொள்ள சேலம் –நாமக்கல் –ஈரோடு – திருப்பூர் - கோவை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஒன்றிய – நகர – பேரூர்நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுதங்கள் பகுதிகளில் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும்கட்சியின்வளர்ச்சி குறித்தும் தங்களின் கருத்துக்களை கூறவேண்டுமெனஅறிவுறுத்தப்படுகிறார்கள்.