• நவீன இந்தியாவின் சிற்பியாக விளங்கும் தங்களின் தேசப்பணி தொடரவேண்டும் பிரதமர் மோடிக்கு டாக்டர் பாரிவேந்தர் பிறந்தநாள் வாழ்த்து

    பாரம்பரியமிக்க இந்தியத் திருநாட்டின் பிரதமராக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் பொறுப்பேற்றீர்கள். இந்தியாவின் மேலாண்மையை உலகம் ஏற்கும் வகையில்,தங்களின் ஆட்சிப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனை அங்கீகரிக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைய மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

     ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும்படி தங்களின் பொதுவாழ்வுப் பணி தூய்மையானதாகவும் – நேர்மையானதாகவும் உள்ளது. உங்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகின்றோம். இத்தேசப்பணி மேன்மேலும் தொடர,தாங்கள் பிறந்த இந்நன்நாளில் வாழ்த்தி மகிழ்கின்றேன்.