• ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட ‘ஜெம்’ நிறுவனம் எடுத்துள்ள முடிவு மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி -டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு -

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவசாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கஜெம்’ நிறுவனத்துடன் 2017-மார்ச் மாதம் 27-ம் தேதி மத்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டதுஎனினும் தமிழக அரசுஇந்திய இயற்கை எரிவாயுக் கழகத்திற்குகொடுத்திருந்த குத்தகையை ஜெம் நிறுவனத்திற்கு மாற்றித்தரவில்லைமேலும்இத்திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்து வருவதால்ஜெம்நிறுவனத்தால் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

    இத்திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில்கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால்,இத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுகுறிப்பாக கடந்த 172நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் எந்த வித அச்சமும் – அவ நம்பிக்கையுமின்றிபோராட்ட களத்தில் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்திவந்துள்ளனர்.

    இதன் பயனாகஇத்திட்டத்தை கைவிடுவதாகக் கூறி மத்திய இயற்கை எரிவாயுமற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கு ‘ஜெம்’ நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.இதனை ஏற்று மத்திய அரசும் இத்திட்டத்தை ரத்து செய்துவிடும் என நம்புகின்றேன்.தங்கள் நிலையில் உறுதியாக நின்றுஇறுதிவரை தொடர்போராட்டம் நடத்தி வந்தநெடுவாசல் கிராம மக்களுக்கும், என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.