Loading...

செய்திகள்

Apr 16, 2018
News Image

IJK தென்சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு –

இந்திய ஜனநாயகக் கட்சியின் தென்சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று (15.04.2018) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில், தென் சென்னை  மாவட்டத் தலைவராக திரு.V. நெல்லை ஷண்முகம், செயலாளராக திரு.T.K.மூர்த்தி, துணைச் செயலாளராக திரு.பெருமாள் செல்வம், இளைஞர் அணி செயலாளராக திரு.சாய்வினோத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான நியமன ஆணையை வழங்கி, டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

மேலும், சினிமா ஒப்பனையாளர்கள் சங்கம், சினிமா மற்றும் சின்னத்திரை தயாரிப்பு உதவியாளர்கள் சங்கம், உடை அலங்கார தொழிலாளர்கள் சங்கம், சின்னத்திரை மகளிர் சங்கம், சண்டைப் பயிற்சியாளர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில், கட்சியின்  தலைவர், பொதுச்செயலாளர் திரு.P. ஜெயசீலன், இணை பொதுச்செயலாளர் திரு.R. கிருஷ்ணமூர்த்தி, முதன்மை அமைப்புச் செயலாளர் திரு.S.S. வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

Back to News