• திருச்சி மாவட்ட திமுக பிரமுகர் சீமானூர் பிரபு அவர்களின் மறைவுக்கு டாக்டர் பரிவேந்தர் இரங்கல்

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய திமுக செயலாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளராகவும் போட்டியிட்ட அருமை நண்பர் திரு.சீமானூர் பிரபு அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    அவர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு முன்பே, அரசியல் தாண்டிய நட்பு முறையில் என்னுடன் நெருங்கிப் பழகி வந்தார். குறிப்பாக, திருச்சியிலுள்ள முத்தரையர் சிலைக்கு என்னை அழைத்து மாலை அணிவிக்கச் சொல்லி மகிழ்ந்தார். நல்ல பண்பாளராகவும் – அப்பகுதி மக்களிடையே செல்வாக்குப் பெற்றவராகவும் விளங்கிய திரு.பிரபு அவர்கள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக நடத்திய, நடைபயணத்தில் கலந்துகொண்டபோது மரணமடைந்தார் என்பது மிகப்பெரும் சோகமாகும். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் – ஆதரவாளர்களுக்கும் மீண்டும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.