• காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 13-ம்தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரண்டு வாரீர்…! - இந்திய ஜனநாயக கட்சியினருக்கு டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு -

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் அரசியல் ரீதியிலான நட்புடன் இருந்தாலும்,மாநிலத் தேவைகளை வலியுறுத்துவதிலும் – தமிழக மக்களின் நலன் காக்க போராடுவதிலும் இந்திய ஜனநாயக கட்சி என்றைக்கும் பின்வாங்கியதில்லை.

    அந்த வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டுமென மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகின்றோம். அதனை மேலும் வலியுறுத்தும் வகையில், வருகின்ற13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    நாம் நடத்த உள்ள இந்த ஆர்ப்பாட்டம், தமிழக விவசாயிகளின் கோரிக்கையினை மத்திய – மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்கின்ற வகையில் எழுச்சியுடனும், உத்வேகத்துடனும்நடைபெற வேண்டும். எனவே கட்சியின் மாநில – மாவட்ட – ஒன்றிய – நகர – கிளை அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும், மகளிர் அணியினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இந்த அறவழி ஆர்ப்பாட்டம் வெற்றிபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.