அன்பும் கருணையும் நிறைந்த மனிதகுமாரனாக இயேசு பிறந்தது மானுட சமூகத்தின் ஆன்ம வளர்ச்சிக்காகவும், மனித குல ஒற்றுமைக்காகவும் என ஆன்றோர்களால் உரைக்கப்படுகின்றது. புரட்சியாளராக - எளிய மக்களின் இதயம் பேசிய மொழியாக விளங்கியவர் இயேசு பெருமான்.
அவரின் ஆன்ம வெள்ளத்தில், மத அதிகார இருள் ஓடி ஒளிந்தது. அதனை ஏற்கும் மனமில்லா, கள்ள மனம் படைத்தவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தனர். எனினும், இறைவனின் குமாரனாகிய இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என விவிலியம் கூறுகிறது.
அவரின் போதனைகளே என்றும் உயிர்த்தெழுந்துள்ளன என நாம் அதனை உள்வாங்கி, அவை உலக நன்மைக்கு உவப்பானதாக இருக்கவேண்டும் எனக்கூறி கிறித்துவ சகோதர – சகோதரிகளுக்கு என் இதயம் நிறைந்த புனிதவெள்ளி (ஈஸ்டர்) திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies