• காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மறைவிற்கு - IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் இரங்கல் -

    காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று (28.02.2018) முக்தி அடைந்தார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    ஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள் தனது 22-ஆம் வயதில் இளைய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டு, 1994-ஆம் ஆண்டு மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் மறைவுக்குப் பின்னர் சங்கரமடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    ஸ்ரீ ஜெயேந்திரர் அவர்களுக்கும் – எனக்கும் ஆன்மீகத்தையும் தாண்டி பொதுநலப்பணிகளில் நல்ல தொடர்பு உண்டு.  என் இல்லத்திற்கு அவர் நேரில் வருகை தந்து என்னையும், என் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்ததை என்றும் மறக்க முடியாது. ஆன்மீகப் பணியுடன், சமூகப் பணியினையும் ஒருங்கிணைத்து சாதாரண - சாமானிய மக்களிடமும் தனது உபதேசங்களின் மூலமும், செயல்பாடுகளின் மூலமும் மிகப்பெரும் தொண்டாற்றியவர் ஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள். அவரின் மறைவால் வருத்தமுற்றிருக்கும் பக்தர்களுக்கும் – காஞ்சி சங்கரமடத்தின் பொறுப்பாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.